மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் மாசி மஹோற்சவ விஞ்ஞாபனம் 2022

மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் மாசி மஹோற்சவம் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 26 ஆம் திகதி புதன் கிழமை காலை 7:30 மணிக்கு கொடி உள்வீதி வலமும், காலை 11 மணிக்கு மேல் துவஜாரோகணத்துடன் (கொடியேற்றம்) ஆரம்பமாகிவுள்ளது.

மாசி மாதம் 05 ஆம் நாள் (17.02.2022) வியாழக்கிழமை அன்று காலை இரதோற்சவமும், மாசி மாதம் 07 ஆம் நாள் (19.02.2022) சனிக்கிழமை காலை தீர்த்தோற்சமும் அன்றிரவு துவஜா அவரோகணமும் (கொடியிறக்கம்) நடைபெறவுள்ளது.

26.01.2022 முதல் 20.02.2022 வரை தினமும் பகல் 11:00 மணிக்கும்,மாலை 6 மணிக்கும் சுவாமி உள்வீதி, வெளிவீதி திருவிழாக்கள் நடைபெறவுள்ளதாக கோவில் அறங்காவல் சபை தெரிவித்துள்ளது.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று நோயின் அச்சுறுத்தல் இருப்பதினால் தேவஸ்தானத்திற்கு வரும் அடியார்களின் வருகை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 17.02.2022 காலை 8 மணிமுதல் தேர்த்திருவிழா நிகழ்ச்சிகள் வானொலியிலும், தொலைகாட்சிகளிலும் நேரலையாக ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.