மஹேல ஜெயவர்தனவிற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட்டில் புதிய பதவி

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் மஹேல ஜெயவர்தன வருகின்ற 2022 ஜனவரி 1 ஆம் திகதி முதல் ஒரு வருட காலத்திற்கு இலங்கை தேசிய கிரிக்கெட் அணிக்கான பயிற்றுவிப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜெயவர்த்தனவின் புதிய நியமனத்தின் கீழ், அவர் இலங்கை கிரிக்கெட் தேசிய ஆண்கள் அணியைத் தவிர அனைத்து தேசிய அணிகளின் கிரிக்கெட் பிரிவின் பொறுப்பாளராக இருப்பார்.

இலங்கை கிரிக்கெட்டின் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவுடன் கலந்தாலோசித்து, இலங்கை கிரிக்கெட் நிர்வாகக் குழுவால் மஹேல ஜெயவர்தன குறித்த பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.