தபால் திணைக்கள தொழிற்சங்கங்கள் 32 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பு!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தபால் திணைக்களத்தின் சகல தொழிற்சங்கங்களும் இன்று முதல் 32 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளன.

இன்று பிற்பகல் 4 மணிமுதல் நாளை நள்ளிரவு வரை இந்த அடையாள பணிப்புறக்கணிப்பு தொடரும் என அஞ்சல் மற்றும் மின்சார கட்டமைப்பு அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சாந்த குமார மீகம தெரிவித்துள்ளார்.

நீண்ட காலமாக அஞ்சல் திணைக்கள சேவையில் பாரிய குறைபாடுகளுள்ள போதிலும் அவை இன்னும் தீர்க்கப்படாதுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.