சிங்கப்பூர் விரைந்தார் கோட்டா

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ,வைத்திய பரிசோதனை ஒன்றுக்காக சிங்கப்பூர் சென்றிருப்பதாக தெரியவருகிறது.

சிங்கப்பூரில் சில தினங்கள் அவர் தங்கியிருந்து வைத்திய பரிசோதனைகளை மேற்கொள்வாரென தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி நாடு  திரும்பும் வரை அவரின் பொறுப்புக்களை பிரதமர் கவனிக்கவுள்ளார்.

இதேவேளை,மோசமான சுகயீனம் காரணமாகவே ஜனாதிபதி வெளிநாடு சென்றுள்ளதாக வெளிவந்துள்ள செய்திகளை ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் நிராகரித்தன . அவர் வழமையான வைத்திய பரிசோதனைக்கே சென்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.