இன்றும் மின்வெட்டு அமுலாகும் – விசேட அறிவிப்பு

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மின் தடை தொடரும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

நுரைச்சோலை அனல்மின் நிலையம் முழுமையாக புனரமைக்கப்பட்டுள்ள நிலையில் இனி மின்வெட்டு ஏற்படாது என மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே கடந்த வியாழக்கிழமை உறுதியளித்திருந்தார்.

ஆனால் இன்னமும் கோளாறு சரி செய்யப்படாத காரணத்தினால் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி முதல் இரவு 9:30 மணி வரையான நேரப்பகுதிக்குள் நாட்டின் பல பகுதிகளில் 30 நிமிடங்கள் மின்வெட்டு ஏற்படலாம்” என்று மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.