வரவு செலவு திட்டம் 93 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் சற்று நேரத்திற்கு முன்னர் இடம்பெற்ற போது, வரவு செலவுத் திட்டம் 93 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 157 வாக்குகளும் எதிராக 64 வாக்குகளும் அளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதற்கமைவாக 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதேவேளை, தமிழ் முற்போக்கு கூட்டணியின் 5 எம்பிக்களான மனோ கணேசன், ப. திகாம்பரம், வி. இராதாகிருஷ்ணன், எம். வேலுகுமார், எம். உதயகுமார் வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.