எரிவாயு அடுப்பு வெடித்ததில் பற்றி எரிந்த உணவகம்

அனுராதபுரம் குருந்தன்குளம் பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் நேற்று 04 ம் திகதி மாலை 6.45 மணியளவில் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

தீ விபத்தில் கடைக்கு பலத்த சேதம் ஏற்பட்டது.

பலத்த சத்தத்துடன் தீ பரவியதாகவும், மக்களுடன் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தனது கடையில் சமையலுக்கு பயன்படுத்தப்பட்ட எரிவாயு அடுப்பு வெடித்ததால் இந்த வெடிப்பு ஏற்பட்டதாக குறித்த உணவகத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.