கொழும்பு – ஐந்து லாம்பு சந்தியில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் தீப்பரவல்!

கொழும்பு – ஐந்து லாம்பு சந்தியில் உள்ள வர்த்தக நிலையமொன்றில்

இன்று  05 ம் திகதி காலை தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும், கொழும்பு தீயணைப்பு பிரிவினரால் குறித்த தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேங்காய் நிலக்கரி, பிளாஸ்டிக், நிலக்கரி, வெற்று பீப்பாய்கள், பிளாஸ்டிக் வாளிகள் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்ட வர்த்தக நிலையமொன்றிலேயே இவ்வாறு தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

இந்த தீப்பரவல் மின் கசிவினால் ஏற்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.