நாட்டின் சில பகுதிகளில் இன்றிரவு இடியுடன் கூடிய மழை!

நாட்டின் சில பகுதிகளில் இன்று 05ம் திகதி   மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழைபெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதன்படி மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களின் சில பகுதிகளில் இன்று 75 மில்லிமீற்றர் அளவில் கடும் மழைபெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

வடமேல், வடமத்திய மாகாணங்களிலும், வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழைவீழ்ச்சி பதிவாககூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.