நுவரெலியாவிலும் சமையல் எரிவாயு அடுப்பு வெடித்தது

நுவரெலியா – பட்டிப்பொல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இன்று 02ம் திகதி மதியம் எரிவாயு அடுப்பு வெடித்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

குடியிருப்பாளர்கள் எரிவாயு அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தபோது, திடீரெனச் சமையல் எரிவாயு அடுப்பு வெடித்துள்ளது.

இந்த வெடிப்பு சம்பவத்தினால் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதுடன் பட்டிப்பொல காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.