எரிவாயு விலையை நிர்ணயிக்க விலை சூத்திரம்

எரிவாயுவிற்கு விலை சூத்திரம் ஒன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லாப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்று 29 ம் திகதி இடம்பெற்ற தெரண “BIG FOCUS” நிகழ்ச்சியில் கலந்து கொண்ட லாப்ஸ் நிறுவனத்தின் தலைவர் டபிள்யூ.கே.எச். வேகபிட்டிய இதனைத் தெரிவித்தார்.

இன்றைய கணிப்புகளின்படி, அடுத்த மாதம் எரிவாயு விலை ஓரளவுக்கு குறையும் எனவும் அதன்படி, அடுத்த சில மாதங்களில் விலை மேலும் குறையும் என தாங்கள் எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நிவாரணம் பெறும் முதல் மாதத்தில் இருந்து எங்களால் சுயமாக தயாரிக்கப்பட்ட விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.

எரிவாயு விபத்துக்கள் ஏற்பட்டால் தங்களிடம் காப்பீடு ஒன்றும் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.