சற்றுமுன் இலங்கையில் அதிகரித்த கொரோனா நோயாளர்கள்!

இலங்கையில் மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஐக்கிய இராச்சியத்தில் இருந்து வருகை தந்த ஒருவர் மற்றும் இந்தியாவில் இருந்து வந்த கடற்படை அதிகாரி ஒருவரே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளனானவர்களின் எண்ணிக்கை 3142 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இன்றைய தினம் மேலும் 11 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,946 ஆக அதிகரித்துள்ளது.

தற்போதைய நிலையில் 184 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், 12 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.