‘கல்யாணி பொன் நுழைவாயில்’ நாளை மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படவுள்ளது

‘கல்யாணி பொன் நுழைவாயில்’ என அழைக்கப்படும் இலங்கையின் முதலாவது அதிநவீன கேபிள் தாங்கி பாலமான, புதிய களனி பாலத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் நாளை 24 ம் திகதி பிற்பகல் திறந்து வைக்கவுள்ளனர்.

களனி கங்கையின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள இந்தப் பாலத்தின் நீளம் 380 மீற்றர்களாகும்.

இந்தப் பாலத்தின் நிர்மாணப் பணிகள் இரண்டு தொகுதிகளின் கீழ் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

உருக்கு கம்பிகளால் கட்டி முடிக்கப்பட்ட பாலத்தின் முதல் தொகுதிக்காக 31,539 மில்லியன் ரூபா செலவிடப்படுள்ள அதே நேரம் இரண்டாவது தொகுதியான கொங்கிரீட் தொங்கு பாலங்களின் நிர்மாணத்துக்காக 9,896 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

பாலத்தின் கட்டுமானத்துக்கு JICA எனப்படும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் மூலம் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.