அனைத்து முச்சக்கர வண்டிகளிலும் இனி மாற்றம்…

அனைத்து முச்சக்கர வண்டிகளும் ஜனவரி 1 ஆம் திகதி தொடக்கம் மீற்றர் ரெக்ஸிகளாக மாற்றப்படும் என்று இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

ஜனவரி 1 ஆம் திகதி தொடக்கம் மேல் மாகாணத்தில் இதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.

3 மாத காலப்பகுதிக்குள் அனைத்து பிரதேசங்களிலும் இதற்கான நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும்.

மீற்றர் இல்லாது வாடகை முச்சக்கர வண்டிகளைச் செலுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம மேலும் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களம்