உணவுப் பொதி மற்றும் தேநீரின் விலை அதிகரிப்பு

நாளை  23 ம் திகதி  முதல் உணவுப் பொதி மற்றும் தேநீர் ஆகியவற்றின் விலைகளை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று   22 ஆம் திகதி  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில், உணவுப் பொதியொன்றின் விலை 20 ரூபாவினாலும், ஒரு கோப்பை தேநீரின் விலை 5 ரூபாவினாலும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

புதிய விலையின் அடிப்படையில் மீன் உணவுப் பொதியின் விலை 200 ரூபாவாகவும், மரக்கறி உணவுப் பொதியின் விலை 160 ரூபாவாகவும் அதிகரிக்கப்படுவதுடன் இறைச்சி உணவுப் பொதியின் விலை 230 -250 ரூபாவாகவும் காணப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.