வடக்கு நோக்கி செல்லும் ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி ஆணைக்குழு

ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி ஆணைக்குழு வட மாகாண மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றைய தினம் அதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக குறித்த ஆணைக்குழுவின் தலைவர் வணக்கத்திற்குரிய கலகொடஅத்தே ஞானசார தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் நேற்றைய தினம் வவுனியா மாவட்டத்தில் உள்ள மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.