நுவரெலியாவில் உர தட்டுப்பாடுக்கு தீர்வு கோரி கருப்பு கொடி ஏற்றி போராட்டம்

உர தட்டுப்பாடு காரணமாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி நுவரெலியா மற்றும் கந்தப்பளை நகரங்களில் உள்ள சகல வர்த்தக நிலையங்களை மூடி கருப்பு கொடி ஏற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு நுவரெலியா விவசாயிகள் தீர்மானித்துள்ளனர்.

அத்துடன் நுவரெலியா பொருளாதார மத்திய நிலையமும் இன்றைய தினம் மூடப்படுகின்றது.

இதுதவிர எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பேலியகொட மெனிங் சந்தைக்கு மரக்கறிகளை விநியோகிக்கும் செயற்பாடு நிறுத்தப்படவுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

தற்போதைய நிலையில் பொருளாதார மத்திய நிலையங்களுக்கான மரக்கறி விநியோகங்கள் தடைப்பட்டுள்ளன.

இதன் காரணமாக நாளுக்கு நாள் மரக்கறிகளின் விலைகள் அதிகரிப்பதாக விற்பனையாளர்களும் நுகர்வோரும் தெரிவிக்கின்றனர்.