பெருந்தோட்டப் பகுதி மக்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுகின்றனர் – சாடும் திகாம்பரம்

பெருந்தோட்டப் பகுதிகளில் மக்கள் முகாமைத்துவத்தினரால் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அடுத்த ஆண்டுக்கான பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் இன்று பங்கேற்று கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

அத்துடன் சில பெருந்தோட்ட நிறுவனங்களில் உரிய தினங்களில் வேதனம் வழங்கப்படுவதில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

இதேவேளை, கூட்டு ஒப்பந்தம் இன்மையால் பெருந்தோட்ட நிறுவனங்கள் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதாக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

அத்துடன் எதிர்வரும் 22 ஆம் திகதி இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.