தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தால் கடுமையான வாகன நெரிசல்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின், கொட்டாவ நுழைவாயிலிலிருந்து மாத்தறை திசையாக கடுமையான வாகன நெரிசல் நிலவுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அப்பகுதியில் ஏற்பட்ட பாரிய விபத்தொன்றையடுத்து, இவ்வாறு வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நெடுஞ்சாலையில் மாத்தறை நோக்கி பயணித்த பேருந்தின் பின்னால், மகிழுந்தொன்று மோதியதுடன், குறித்த மகிழுந்தை அதன் பின்னால் சென்ற மற்றொரு சொகுசு மகிழுந்து மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.