உடன் அமுலாகும் வகையில் சிகரெட்டுக்கான வரி அதிகரிப்பு!

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சிகரெட்டுக்கான வரியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி சிகரெட் ஒன்றுக்கான விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என நிதியமைச்சர் நாடாளுமன்றத்தில் பாதீட்டை சமர்ப்பித்து தெரிவித்துள்ளார்.

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மது வரியும் அதிகரிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

25 மில்லியன் ரூபா வருமானத்தை எதிர்பார்த்து இது நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் அதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று பிற்பகல் வெளியிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, வீதி விபத்துக்களுக்கு உள்ளாகும் வாகனங்களுக்காகக் கட்டணம் அறவிடுவதற்காக திட்டமொன்று முன்மொழியப்பட்டதுடன், சுங்கச்சாவடியில் சிக்கியுள்ள வாகனங்களை உரிய அபராதம் மற்றும் வரிகளைச் செலுத்தி விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என நிதியமைச்சர் தெரிவித்தார்.