தனியார் துறையில் ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகாிக்க நாடாளுமன்றம் அனுமதி!

தனியார் துறையில் ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதெல்லையை 60 ஆக உயர்த்தும் சட்டமூலம் நாடாளுமன்றில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.

தனியார் துறையில் ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதெல்லையை நிர்ணயிக்கும் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு தொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு அனுமதி வழங்கியிருந்தது.

இக்குழுவின் கூட்டம் அமைச்சர் நிமல் சிறிபால டி. சில்வா தலைமையில் நேற்று முன்தினம்  இடம்பெற்ற போதே இந்த அனுமதி வழங்கப்பட்டது.

அதே போன்று, வேலையாட்களின் வேலையை முடிவுறுத்தல் (திருத்த) சட்டமூலத்துக்கும் குழுவின் அனுமதி வழங்கப்பட்டது.

இந்தச் சட்டமூலங்கள் ஊடாகத் தனியார் துறை ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 60 வயது வரை அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டது.

இது தொடர்பான சட்டமூலம் இன்று நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டதையடுத்து, திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.