வௌ்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பாலம்!

கொடதெணியாய, பல்லேகம வீதியின் மாஓய ஊடாக நிர்மாணிக்கப்பட்டிருந்த பாலத்தின் ஒரு பகுதி உடைப்பெடுத்துள்ளது.

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பெய்த கடும் மழையினால் குறித்த பாலம் இவ்வாறு உடைப்பெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக குறித்த வீதியின் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

கடந்த சில தினங்களாக பெய்த கடும் மழை காரணமாக மாவனெல்லை, ஹீனடிபல வீதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக வீதியின் போக்குவரத்து முழுமையாக தடைப்பட்டுள்ளது.