கினிகத்தேனை – நாவலப்பிட்டி வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி!

கினிகத்தேனை – நாவலப்பிட்டி பிரதான வீதியில் அம்பகமுவ, பகதுலாவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று  காலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

ஹட்டனிலிருந்து நாவலப்பிட்டி திசையாகப் பயணித்த இ.போ.ச பழுதுபார்ப்பு பிரிவின் பேருந்து ஒன்றும், நாவலப்பிட்டியிலிருந்து கினிகத்தேனை திசையாகப் பயணித்த பாரவூர்தியொன்றும் மோதிக்கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதில், பாரவூர்தியின் சாரதி உயிரிழந்துள்ளார்.

மேலும் பேருந்தின் சாரதி பலத்த காயமடைந்த நிலையில் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், பாரவூர்தியின் உதவியாளர் சிறு காயங்களுடன் உயிர்த்தப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கினிகத்தேனை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.