போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய பெண்கள் கைது

களுத்துறை சிறைச்சாலையில் இருந்து கைப்பேசியின் ஊடாக ​மேற்கொள்ளப்படும் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய 2 பெண்கள் அங்குலானை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது அவர்களிடம் இருந்து 8 கிராம் மற்றும் 570 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

21 மற்றும் 34 வயது உடைய அவர்கள் அங்குலானை மற்றும் ராவதா வத்தை பிரதேசங்களில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

அங்குலானை பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவினரால் சந்தேகநபர்கள் ஆன பெண்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இதன்போது அவர்களிடம் இருந்து 33 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் ஆன பெண்கள் மொரட்டுவை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பின்னர் எதிர்வரும் 29 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.