கைது செய்யப்பட்ட நபரை காப்பாற்ற பொலிஸார் மீது தாக்குதல்

கஹட்டகஸ்திகிலிய, குருக்குராகம பகுதியில் பொலிஸார் மீது பிரதேசவாசிகள் குழு ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 27 கிராம் ஹெரோயினுடன் 18 வயது இளைஞன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதன்போது கைது செய்யப்பட்ட நபரை காப்பற்றுவதற்காக அப்பகுதியை சேர்ந்த சிலர் பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதலுக்கு உள்ளான பொலிஸ் பரிசோதகர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் 6 பெண்கள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.