புதிய கல்வி மறுசீரமைப்பை 2023 இல் அறிமுகப்படுத்த நடவடிக்கை

மானிட மேம்பாட்டை இலக்காகக் கொண்டு, இலங்கைக்கு ஏற்றத் தொழிற்படையை உருவாக்குவதற்கான புதிய கல்வி மறுசீரமைப்பை, 2023 ஆம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இந்தக் கல்வி மறுசீரமைப்பானது, சாதாரண தரத்திற்காக 2024 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

சர்வதேச போக்குகளைக் கருத்திற்கொண்டு, இலங்கையின் அடையாளத்தை மாற்றாத வகையில் இந்தக் கல்வி மறுசீரமைப்பு இடம்பெறும் எனக் கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

குறிப்பாக சர்வதேச மட்டத்தில் ஏற்றுக்கொள்ளக்கூடிய தகைமையுடைய திறமையான, வேலை உலகத்திற்குப் பொருத்தமானவர்களை உருவாக்கும் மறுசீரமைப்புக்கான கருத்தாடலை சமூகத்தில் ஏற்படுத்த வேண்டும்.

இந்தக் கருத்தாடலின்போது, கிடைக்கும் விடயங்களுக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகக் கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.