புலம் பெயர்ந்து வாழும் தமிழ் உறவினர்களும் ஒன்றிணைய வேண்டும் – விதுர

தொல்லியல் மரபுரிமை வரலாற்றுச் சின்னங்களை எதிர்காலத்தில் பேணி பாதுகாப்பதற்கு புலம் பெயர்ந்து வாழும் தமிழ் உறவினர்களும் ஒன்றினைய வேண்டும். அதன் போது ஐனநாயக ரீதியாக வரலாற்றுப் பொறிமுறையிலான சின்னங்களின் பொக்கிசங்களை பாதுகாக்க முடியும் என தேசிய மரபுரிமைகள் அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரம நாயக்க தெரிவித்தார்.

தேசிய மரபுரிமைகள் அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் அமைச்சு தொல்லியல் திணைக்களம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் வடபகுதியின் யாழ் நெடுந்தீவு பகுதியில் நூற்றாண்டு காலப்பகுதிக்கு உள்ள போத்துக்கேயர், ஒல்லாந்தர் காலத்தில் கட்டப்பட்டு இருந்த தொல்லியல் சின்னங்களின் அழிவடைய விடாது. அதனை மீண்டும் பேணி பாதுகாக்கும் நோக்கிலான திட்ட முன்மொழிவுகளை எடுக்கும் வகையிலான கள விஜயம் தேசிய மரபுரிமைகள் அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள், மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தலைமையில் நேற்று நெடுந்தீவில் இடம்பெற்றது.

இதன் போது ஊடகங்களுக்கு கருத்துதெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்தார் மேலும் கருத்து தெரிவிக்கையில்..

இதன் போது 09 புராதன சின்னங்களுக்குரிய புறாக்கூடு, ஒல்லாந்தர் கால நீதிமன்றம், வைத்தியசாலை, ஒல்லாந்தர் வெடியரசன் கோட்டை, சிவன் ஆலயம், பெருக்கு மரம், வளரும் கலங்கரை வெளிச்சம் கூடு ஆகியவற்றுக்கு சென்று உரிய கள நிலவரங்களை ஆராய்ந்தனர்..

இவ் கள விஜயத்தில் பாராளுமன்ற பிரதிக்குழுக்களின் பிரதித்தலைவரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவரும் ஆகிய அங்கஜன் இராமநாதன், தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் அநுர மனுதுங்க, நெடுந்தீவு பிரதேச செயலாளர் எ.ஜெயகாந் மற்றும் தொல்லியல் திணைக்கள அலுவலகர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.