சீனாவின் பசளை நிராகரிக்கப்பட்ட சம்பவம் – சீன தூதரகத்திடம் அறிக்கை சமர்பிக்க நடவடிக்கை

சீனாவின் சர்ச்சைக்குரிய சேதன பசளையை நிராகரித்தமை உள்ளிட்ட காரணிகள் அடங்கிய விரிவான அறிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை சீன தூதரகத்திடம் கையளிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த அறிக்கையை இந்த வாரத்திற்குள் சீன தூதரகத்தில் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

எனினும், இன்றைய தினம் அந்த அறிக்கை கையளிக்கப்பட மாட்டாது என விவசாய அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதித்த கே. ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கமநல சேவை மத்திய நிலையங்கள் ஊடாகப் பெரும்போகத்திற்கு தேவையான நனோ நைட்ரஜன் திரவ உரத்தினை விவசாயிகளுக்கு விநியோகிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எவ்வாறாயினும், சில பிரதேசங்களில் தமக்கு தேவையான பசளை கிடைக்கவில்லையென விவசாயிகள் குற்றம் சுமத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.