நாட்டின் பல பகுதிகளுக்கு இன்றிரவு பலத்த மழை!

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல் மாகாணங்களிலும் காலி , மாத்தறை மாவட்டங்களிலும் எதிர்வரும் மணித்தியாலங்களில் இடியுடன் கூடிய மழைபெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் இன்றிரவு 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழைபெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழைபெய்யும் சந்தர்ப்பங்களின் போது பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.