புசல்லாவை எல்பட தோட்டப் பகுதி மக்கள் போராட்டத்தில்

புசல்லாவை – எல்பட தோட்டப் பகுதியில் உள்ள தேயிலை தொழிற்சாலையினை மீள இயக்குமாறு கோரி தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தினை முன்னெடுத்துவருகின்றனர்.

ஒரு மாதத்திற்குள் மீள திறக்கப்படும் என தெரிவித்து, கடந்த செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி இந்த தேயிலை தொழிற்சாலை மூடப்பட்டது.

எனினும் இதுவரையில் அதனை மீள இயக்குவதற்கு தோட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையினையும் மேற்கொள்ளவில்லை.

இந்தநிலையில் தங்களது கோரிக்கைக்கான தீர்வினை பெற்றுத்தரும் வரையில் தாங்கள் தொழிலுக்கு செல்லப்போவதில்லை எனவும் போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.