சிகரெட் விலை அதிகரிப்பு?

சிகரெட்டின் விலையை நிர்ணயிக்கும் விலை சூத்திரம் காரணமாக எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் சிகரெட் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக புகையிலை மற்றும் மது ஒழிப்பு தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் கலாநிதி சமாதி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று   இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

விலை சூத்திரத்தின் அடிப்படையில் ஒவ்வொரு வருடமும் சிகரெடின் விலை அதிகரிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

புகையிலை மற்றும் மது பழக்கத்திற்கு அடிமையானவர்களை மீட்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.