பல்வேறு நீர்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரிப்பு

நிலவும் மழையுடனான காலநிலையை தொடர்ந்து பிரதானமான பல்வேறு நீர்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொடர்ந்தும் இந்த நிலை நீடித்தால் வான் கதவுகளை திறக்க வேண்டி ஏற்படும் என நீர்பாசன திணைக்களத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

முக்கிய நீர்த்தேக்கங்கள் 73 இல் 30 மேற்பட்ட நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் 70% மேல் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.