நிரந்தர நியமனத்தை வழங்குமாறு கோரி வட மாகாண சுகாதார தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்

தமக்கான நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும் எனக் கோரி வட மாகாண சுகாதார தொண்டர்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.

வடக்கு மாகாண ஆளுநர் செயலக வளாகத்தில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

வட மாகாணத்தில் நீண்ட காலமாக சுகாதாரத் தொண்டர்களாக சேவையாற்றிய 970 பேரில் 349 பேருக்கு, அவர்களது சேவை கால அடிப்படையில் அரச நியமனத்துக்கான கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

எனினும், ஏனையோருக்கு இதுவரை நியமனம் வழங்கப்படவில்லையென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

எனவே சுகாதார தொண்டர்களாகப் பணியாற்றியுள்ள சகலருக்கும் விரைவில் நியமனம் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி மேற்படி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.