மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு நீக்கப்பட்டதை கொண்டாடும் மக்கள்

மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு நீக்கப்பட்டதன் பின்னர் தங்கள் அதிகளவான மக்கள் அத்தியவசிய தேவைகளுக்காக தங்களது பயணங்களை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான நிலையில் அம்பிலிபிட்டிய சந்திரகா குளத்திற்கு அருகில் அதிகளவான மக்கள் ​வேடிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களில் பெரும்பாலனோர் பொறுப்பற்ற விதத்தில் நடந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மக்கள் பொறுப்பற்ற விதத்தில் நடந்து கொண்டால் எதிர்காலத்தில் நாட்டிற்கு பாரிய சிக்கல் ஏற்படலாம் என சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.