நியூசிலாந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவான இலங்கை வம்சாவளிப் பெண்

இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த வனுஷி வொல்டர் நியூசிலாந்து பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகியுள்ளார்.

39 வயதுடைய இவர் ஒக்லேன்ட்டின் மேல் துறைமுக தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டிருந்தார்.

39 வயதுடைய இவர் மனித உரிமைகள் தொடர்பிலான வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது.