மாகாணங்களுக்கு இடையிலான தொடருந்து சேவைகள் திங்கள் முதல் ஆரம்பம்

கொவிட் பரவல் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த மாகாணங்களுக்கு இடையிலான தொடருந்து சேவைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.

இந்த சேவைகள் எதிர்வரும் முதலாம் திகதி திங்கட்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக தொடருந்து நிலையப் பொறுப்பதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கடந்த 25 ஆம் திகதி முதல் மேல் மாகாணத்தில் மாத்திரம் தொடருந்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டன.

அதற்கமைய, 133 தொடருந்துகள் தற்போது சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

எனினும், இதன்போது, தொடருந்து பிரயாண பருவச்சீட்டு கொண்டுள்ளவர்களுக்கு மாத்திரமே குறித்த தொடருந்துகளில் பயணிக்க அனுமதியளிக்கப்பட்டது.