வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய மேலும் 26 இலங்கையர்கள்.

கொரோனா காரணமாக நாடு திரும்ப முடியாமல் டோஹா கட்டாரில் சிக்கியிருந்த 26 இலங்கையர்கள் இன்று (18) காலை நாடு திரும்பியுள்ளனர்.

இவர்கள் அனைவரும் முப்படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிவரும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கொவிட் 19 வைரஸ் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, தனிமைப்படுத்தல் காலங்களை நிறைவு செய்த மேலும் 66 பேர் இன்றைய தினம் அவர்களது வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். அதன்படி இதுவரையில் இலங்கையில் 53,937 பேர் தனிமைப்படுத்தல் காலங்களை நிறைவுசெய்து இவ்வாறு வீடுகளுக்கு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், 82 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 9,386 பேர் தொடர்ந்து தனிமைப்படுத்தலில் இருந்து வருவதாகவும் கொவிட் 19 வைரஸ் தடுப்பு மையம் தடுப்பு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.