கிணற்றிற்குள் வீழ்ந்த முதலையை உயிருடன் மீட்ட வனவிலங்கு அதிகாரிகள்

காலி-அங்கொக்காவல பிரதேசத்தில் தனியார் காணியொன்றில் இருந்த கிணறொன்றிற்குள் வீழ்ந்த முதலையை வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் உயிருடன் மீட்டுள்ளனர்.

காணியின் உரிமையாளர் வழங்கிய தகவலுக்கு அமைவாக ஹிக்கடுவ வனவிலங்கு திணைக்கள அதிகாரிகளினால் குறித்த முதலை மீட்கப்பட்டுள்ளது.

சுமார் 9 அடி நீளமுள்ள இந்த முதலையை புந்தல தேசிய பூங்காவிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

கொக்கல ஓயாவில் இணையும் கால்வாய் வழியாக வரும்போது இவ்வாறு கிணற்றிற்குள் தவறி விழுந்திருக்கலாம் என வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் குறிப்பிட்டனர்.