கிளைபோசேட் இரசாயன பொருளுடன் மூவர் கைது

தடை செய்யப்பட்ட ‘கிளைபோசேட்’ இரசாயன பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் மூன்று சந்தேக நபர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதன்போது, தலா 100 கிராம் வீதம் உள்ளடக்கியிருந்த 797 பொதிகளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

நுரைச்சோலை பகுதியில் விவசாய நடவடிக்கைகளுக்காக இவற்றை பயன்படுத்துவதற்கு திட்டமிட்டிருந்ததாக முதற்கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.