ஒரு மில்லியன் யூரோ மதிப்புடைய போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது!

தெமட்டகொடை மேம்பாலத்திற்கு அருகில் ஒரு மில்லியன் யூரோ மதிப்புடைய போலி நாணயத்தாள்களுடன் பெண்ணொருவர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

அத்துடன், குறித்த போலி யூரோ நாணயத்தாள்களை இலங்கை ரூபாவிற்கு மாற்ற முற்பட்ட போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள் வெல்லம்பிட்டி மற்றும் ஜா-எல – கொட்டுகொட ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.