டொலர் பற்றாக்குறைக்கான தீர்வு என்ன?

இலங்கையில் தற்போது நிலவும் டொலர் பற்றாக்குறைக்கு தீர்வாக வெளிநாட்டு முதலீட்டாளர்களை இலங்கைக்கு ஈர்ப்பது கட்டாயமாகும் என அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதேஅவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், இந்தியாவின் கோடிஸ்வர வியாபாரியான கௌதம் அதானி தனிப்பட்ட சுற்றுலாவிற்காக இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.