தசைப்பிடிப்பு நிலையம் சுற்றிவளைப்பு

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி நீர்கொழும்பு-பெரியமுல்ல பகுதியில் சட்டவிரோதமான முறையில் நடத்திச் செல்லப்பட்ட தசைப்பிடிப்பு நிலையமொன்று காவல்துறையினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

இதன்போது அங்கு பணியாற்றி வந்த மூன்று பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளதோடு, இவர்கள் அனைவரும் கட்டான, தங்கொட்டுவ மற்றும் மாத்தறை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.