சீனி தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண விசேட கலந்துரையாடல்

நாட்டிற்குத் தேவையான சீனியினை இறக்குமதி செய்வதற்காக அதனுடன் தொடர்புடைய இறக்குமதியாளர்களுடன் இன்றும், நாளையும் கலந்துரையாடவுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு  இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண குறிப்பிட்டுள்ளார்.

இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும் நாட்டில் நிலவும் டொலர் தட்டுப்பாடு காரணமாக சீனி இறக்குமதியினை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகச் சீனி இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் மீண்டும் சந்தையில் சீனி தட்டுப்பாடு நிலவுவதுடன், ஒரு கிலோகிராம் சீனி 170 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.