புதிய சுகாதார வழிகாட்டி வெளியீடு

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் புதிய சுகாதார வழிகாட்டி வௌியிடப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் இந்த வழிகாட்டி வௌியிடப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது அமுலில் உள்ள இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரையான நடமாட்டத்தடை நீக்கப்பட்டுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், திருமண நிகழ்வுகளில் மண்டபத்தின் கொள்ளளவில் 1/3 பங்கினருக்கு பங்குப்பற்ற அனுமதிக்கப்பட்டுள்ளது.

மற்றும், மண்டபங்கள் தவிர்ந்த வௌி இடங்களில் நடத்தப்படும் திருமண வைபவங்களில் 150 பேர் வரை கலந்துக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.