பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்த ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்கு வாய்ப்பு

பாதீட்டுக்கு முன்னர், பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்த ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்கு வாய்ப்பு வழங்க எதிர்பார்ப்பதாகக் கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று  அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேநேரம், தேசிய வேதன கொள்கையைப் பாதுகாக்கும் வகையில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அதிபர், ஆசிரியர்களின் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைத்த அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய மற்றும் ஊடகக்குழு உறுப்பினரான வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் இதனைக் குறிப்பிட்டார்.

இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.