சட்டவிரோத அகழ்வில் ஈடுபட்ட அறுவர் கைது!

வெலிகந்த – அசேலபுர பகுதியில் சட்டவிரோத அகழ்வில் ஈடுபட்ட சந்தேகநபர்களை வெலிகந்த காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

வெலிகந்த மற்றும் குளியாப்பிட்டி பகுதிகளைச் சேர்ந்த 20, 23, 29, 33, 37 மற்றும் 59 வயதுடைய ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து சந்தேகநபர்கள் இன்று  மன்னம்பிட்டிய நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.