சப்ரகமுவ வாகன உரிமையாளர்களுக்கான அறிவித்தல்

சப்ரகமுவ மாகாண வாகன உரிமையாளர்களுக்கு வாகன வருமான அனுமதிப் பத்திரம் வௌியிடும் போது தண்டப்பணம் அறவிடாமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 2021-08-16 தொடக்கம் 2021-10-29 வரையான காலப்பகுதிக்கு இவ்வாறு தண்டப்பணம் அறவிடாமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்றை வௌியிட்டு சப்ரகமுவ மாகாண சபையின் பிரதான செயலாளர் எம்.டீ.ரஞ்ஜனி ஜயகொடி குறிப்பிட்டார்.

2021-10-01 ஆம் திகதி முதல் சப்ரகமுவ மாகாணத்தின் பிரதான அலுவலகங்களில் மற்றும் மாகாணத்தின் அனைத்து பிரதேச செயலகங்களில் வாகன வருமான அனுமதிப் பத்திரம் வௌியிடும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.