மைத்திரி, சஜித், கரு சந்திப்பு

ஆசிரியர்-அதிபர் சம்பள முரண்பாடு பிரச்சினைக்கு தீர்வு காண அனைத்துக் கட்சி மாநாடு ஒன்று நாரஹேன்பிட்ட அபயராம விகாரையில் இன்று  நடைபெற்றது.

கூட்டத்தில் பங்கேற்ற அரசியல் கட்சிகளின் தலைவர்கள், ஆசிரியர்கள் அதிபர்கள் தொழிற்சங்கங்கள் மற்றும் அரசாங்கம் நடுநிலைக்கு வந்து இந்தப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்று குறிப்பிட்டனர்.

இந்த அனைத்துக் கட்சி மாநாட்டில் ஆசிரியர்-அதிபர் சம்பள பிரச்சினை மற்றும் நவீன கல்வி நெருக்கடி குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவர் அகில விராஜ் காரியவசம் மற்றும் அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர்.