இராணுவமயமாக்கலை மேற்கொள்ள முன்வைக்கும் கோரிக்கைகளை அரசாங்கம் நிறைவேற்றக் கூடாது

பெருந்தோட்டப்பகுதிகளில் இராணுவ மயமாக்கலை மேற்கொள்ளுமாறு தோட்ட முகாமையாளர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை அரசாங்கம் நிறைவேற்றக் கூடாது எனத் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் வலியுறுத்தினார்.

இதற்குப் பதிலளித்த பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஸ் பத்திரன, அவ்வாறான எந்தத் தீர்மானமும் இதுவரை எட்டப்படவில்லையென இன்று நாடாளுமன்றில் குறிப்பிட்டார்.