ஆசிரியர் தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

எதிர்வரும் 21ஆம் திகதி பாடசாலைகள் திறக்கப்படுவதற்கு முன்னதாகத் தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என ஒன்றிணைந்த ஆசிரியர் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

அதில் அங்கம் வகிக்கும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இந்தக் கோரிக்கையினை விடுத்துள்ளார்.

வேதன முரண்பாடு தீர்க்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளுடன், ஆசிரிய – அதிபர் தொழிற்சங்கங்கள் நாடளாவிய ரீதியில் இன்று ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்திருந்தன.

அரசாங்கத்தினால் தங்களது பிரச்சினைக்கு விரைவில் தீர்வு வழங்கப்பட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டார்.